YahSaves

Published

- 9 min read

Lent / தவக் காலத்தின் உண்மையான பொருள்

img of Lent / தவக் காலத்தின் உண்மையான பொருள்

தவக் காலம் (Lent) என்றால் என்ன? இந்த உலகத்தின் “கிறிஸ்தவர்களால்” இது ஏன் கடைப்பிடிக்கப்படுகிறது? வேதம் கட்டளையிட்டுயிருக்கிறதா? கிறிஸ்துவோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களில் யாரோ தவக் காலத்தை கடைப்பிடித்தார்களா? ஆதி திருச்சபை பற்றி என்ன? தவக் காலத்தை பற்றி வேதம் என்ன கற்பிக்கிறது?

புத்தாண்டு அல்லாமல், கிறிஸ்துமஸ், ஹாலோவீன், மற்றும் காதலர் தினம் என பிற விடுமுறைகள் மதச்சார்பற்ற மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் தவக் காலம் பெரும்பாலும் விசுவாசிகளால் மட்டும் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதன் அன்று பலர் தங்களின் நெற்றிகளில் சாம்பல் இடுவார்கள். அடுத்த 40 நாட்களுக்கு அவர்கள் சில உணவுகள் அல்லது உடல் இன்பங்களை தவிர்த்து ஈஸ்டர் வரை விரதமிருப்பார்கள். இது இயேசு கிறிஸ்துவின் 40 நாள் வனாந்தரத்திலிருந்த விரதத்தை பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது (மத் 4: 1-2). சிலர் புகைப்பதை விட்டுவிடுகிறார்கள். மற்றவர்கள் மது அருந்துவதை விட்டு விடுகிறார்கள். இன்னும் மற்றவர்கள் அதிகமாக உணவு உண்பதை விட்டு விடுகிறார்கள் அல்லது சபிப்பதை விட்டுவிடுகிறார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு அவர்களை தயார்படுத்தும் வகையில் மக்கள் எதையும் விட்டுக்கொடுப்பதாக சபதம் செய்கிறார்கள்.

தவக் காலத்தை (Lent) அனுசரிக்கும் நபர்கள் தங்களை பத்தியுள்ளவர்கள் என்றும் அர்ப்பணிப்புள்ள நேர்மையானவர்கள் என்று என்னுவார்கள். ஆனால் அது உண்மையிலேயே வேதத்தை சார்ந்த நம்பிக்கையா?

நாம் தவக் காலத்தையும் அதன் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், அதன் வரலாற்று, மற்றும் அதன் உண்மையான பொருளை வேதத்தின்படி ஆராய்வோம், “மனிதர்களின் கற்பனைகள் படி அல்ல” (மாற்கு 7: 7-9).

தவக் காலத்தின் (Lent) நோக்கத்தை ஆராய்தல்

கத்தோலிக்க கலைக்களஞ்சியம் இவ்வராக சொல்கிறது, “தவக் காலத்தின் (Lent) உண்மையான நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்துவின் மரணம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் கொண்டாட்டத்திற்க்கு மக்களை தயார் படுத்துகிறது … சிறந்த அயுத்தம், மிகச்சிறந்த கொண்டாட்டம். தூய்மையான மனமும், உள்ளமும் இருந்தால்தான் இந்த மர்மத்தை புரிந்துகொள்ள முடியும். தவக் காலத்தின் நோக்கம் சுய மறுப்பு மற்றும் பிரார்த்தனை மூலம் மக்களை பாவத்திலிருந்து பரிசுத்தமாக்கவும், கடவுளுடைய விருப்பத்தை செய்யவும் மற்றும் அவரது ராஜ்யம் அவர்கள் இதயங்களில் வர செய்ய வேண்டும் என்பதே.”

மேற்பரப்பில், இந்த நம்பிக்கை நேர்மையாக ஒலிக்கிறது. இருப்பினும், அது கர்த்தரின் பரிசுத்த வார்த்தையான வேதத்துடன் ஒத்துப்போகவில்லை. பரிசுத்த வேதத்தை புரிந்துகொள்ளுதலே உண்மையான தெய்வீக அறிவு (யோவான் 17:17). கர்த்தர், அப்போஸ்தலன் பவுல் மூலம் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிட்டது, “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (II தீமோ 3:14-17).

முதலாவதாக, “புனித வெள்ளி” என்படும் கிறிஸ்துவின் மரணம் மற்றும் “ஈஸ்டர் ஞாயிறு” என்படும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் “கொண்டாத்தை” புரிந்து கொள்ளுங்கள். இவ் விடுமுறை நாட்கள் பண்டைய புறமதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இவை இரண்டும் பஸ்கா காலத்தை மாற்றுவதற்காக பிரதான கிறிஸ்தவத்தால் நிறுவப்பட்ட போலிகள். பஸ்கா மற்றும் புளிப்பில்லாத அப்ப நாட்கள் கிறிஸ்துவாலும், ஆதி அப்போஸ்தலர்களாலும், புறஜாதிகள் உள்ளிட்ட புதிய ஏற்பாட்டு திருச்சபையாலும் கடைப்பிடிக்கப்பட்டது. கர்த்தர் தம் மக்களுக்கு இன்றும் அவற்றைக் கடைப்பிடிக்க கட்டளையிடிருக்கிறார் (I கொரி. 5: 7-8).

இரண்டாவதாக, நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, கர்த்தாரின் பார்வையில் தூய்மையாயினோம் என்று வேதம் சொல்கிறது (எபி. 9: 11-14, 22; 13:12). இது, விசுவாசத்துடனும் (அப்போஸ்தலர் 15: 9) அவருடைய உண்மையும் ஜெபமும் (யோவான் 17:17; 1 தீம் 4: 5) மூலமும் தாழ்மையுடன் ஒப்புவித்து கர்த்தாருக்கு கீழ்ப்படிவதின் (யாக்கோபு 4: 7-10) மூலமும் கர்த்தருக்கு முன்பாக நம்மை சுத்தமாகுகின்றோம். எந்த அளவு உண்ணாவிரதமும், உடல் இன்பங்களிருந்து விலகுவதும் அல்லது வேறு எந்த வடிவமான சுய மறுப்பும் நம்மை தூய்மைப்படுத்தாது.

மூன்றாவதாக, உங்களால், உங்களுக்குள் “கர்த்தரின் சித்தத்தை செய்யும் ஆசையை உருவாக்க முடியாது.” கர்த்தர் மனிதகுலத்திற்க்கு சுய விருப்ப நிறுவம் வழங்கியுள்ளார் என்பது உண்மைதான். இருப்பினும், சரீர மனம் - கர்த்தாருக்கு கீழ்ப்படிய முடியாது. “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். … எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.” (ரோமர் 8: 5, 7).

எப்பொழுதும் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு, இரச்சிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே, கர்ததரின் சித்தத்தை செய்ய முடியும் “ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.” (பிலி. 2:13, திருவிவிலியம்).

நான்காவது, “அவருடைய இராஜ்யத்தை உருவாக்க முதலில் உங்களின் இதயங்களில் உள்ளே அவர் வருவார்” என்று இவ்வுலகின் கிறிஸ்தவத்தினால் கற்பிக்கப்படுவது ஒரு தவறான பாரம்பரியம். இது வேதத்தில் கற்பிக்கப்படவில்லை. கர்த்தர் அவருடைய இராஜ்யத்தை மனிதர்களின் இருதயங்களில் அமைக்கவில்லை. (கர்த்தரின் இராஜ்யத்தை பற்றி புரிந்து கொள்ளுவதற்க்காக விரைவில் நாங்கள் ஒரு கட்டுரை வெளியிடவுள்ளோம்.)

எனவே தவக் காலம் எங்கிருந்து தோன்றினது? எப்படி இது மிகவும் பரவலாக பிரதான கிறிஸ்தவத்தில் அனுசரிக்கப்படுகிறது?

ரோம மாநில மதத்தால் அங்கீகரிக்கப்பட்டது

நம்பினால் நம்புங்கள், தவக் காலம் (Lent) ஒருபோதும் கிறிஸ்வாலோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களாலோ அனுசரிக்கப்பட்டதில்லை. அவர் அவருடைய சீஷர்களுக்கு “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்“ (மத். 28: 19-20). இயேசு ஒருபோதும் அவர்களை தவக் காலம் அல்லது ஈஸ்டர் அனுசரிக்க கட்டளையிடவில்லை . அவர் எவ்வாறாயினும், அவர்களை வைத்திருக்கும்படி கட்டளையிட்டது பஸ்கா மற்றும் புளிப்பில்லாத அப்ப நாட்கள். உண்மையில், அவருடைய பூமியின் கடைசி பஸ்காவின் போது, கிறிஸ்து பஸ்காவை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்து விரிவான வழிமுறைகளை வழங்கினார். புதிய பஸ்காவின் சின்னங்களையும் அவர் நிறுவினார் (யோவான் 13: 1-17).

அலெக்சாண்டர் ஹிஸ்லோப் எழுதியதைக் கவனியுங்கள்; அவரது இரண்டு பாபிலோன்கள் புத்தகத்தில்: “நாம் சபை வரலாற்றில் படிக்கும் ஈஸ்டர் திருவிழா, மூன்றாம மற்றும் நான்காம் நூற்றாண்டுகளுக்கும், இப்போது ரோம தேவாலயத்தில் அனுசரிக்கப்படுகிறதற்கும் பல வேறுபடுகள் உள்ளது. மேலும் அந்நாட்களில் அது ஈஸ்டர் என்ற பெயரால் யாராலும் அறியப்படவில்லை … அந்த திருவிழா [பஸ்கா] விக்கிரகாராதனையும் அல்ல, அதற்கு முன் தவக் காலமும் இல்லை. ‘அது அறியப்பட வேண்டும்,’ என்று ஐந்தாம் நூற்றாண்டில் மார்செல்லின் துறவி காசியானஸ் எழுதினார்.

முதல் நூற்றாண்டில் திருச்சபை தவக் காலத்தை கவனிக்கவில்லை! இது முதலில் ரோம தேவாலயத்தால் கி.பி 325 இல் நைசியா கவுன்சில் உரையாற்றப்பட்டது, அன்று தான் பேரரசர் கான்ஸ்டன்டைன் திருச்சபையை அதிகாரப்பூர்வமாக ரோமானி பேரரசின் மாநில மதமாக அங்கீகரிக்கப்பட்டார். ரோமானிய தேவாலயத்திற்கு மாறாக கோட்பாடுகளைக் கொண்டிருந்த வேறு எந்த கிறிஸ்தவமும் அரசின் எதிரியாக கருதப்பட்டது. கி.பி 360 இல், லாவோடிசியா கவுன்சில் அதிகாரப்பூர்வமாக தவக் காலத்தை அனுசரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டது.

முதலில், மக்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தவக் காலத்தை கவனிக்கவில்லை. சில ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வைத்திருந்தனர். மற்றவர்கள் பொய்யாக கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு இடையில் 40 மணிநேரம் மட்டுமே கடந்துவிட்டது என்று பொய்யாக நம்பி அதை தொடர்ந்து 40 மணி நேரம் வைத்திருந்தனர்.

இறுதியில், இது 40 நாள் உண்ணாவிரதம் அல்லது சிலவற்றிலிருந்து விலகுதல் காலமாக மாறியது. “முக்கியத்துவம் அவ்வளவாக உண்ணாவிரதம் மேல் இல்லாமல், ஈஸ்டர் தயாரிப்புக்காக தங்களின் புதுப்பித்தலைக் கோரியது. இதில் குறிக்கப்பட்ட காலம் உண்ணாவிரதம் இருந்தனர், இருப்பினும் ஒவ்வொரு நாளும் உண்மையுள்ளவர்களாக உண்ணாவிரதம் இருக்கவேணடும் என்று அவசியமில்லை. எனினும், வருடங்கள் செல்ல செல்ல, உண்ணாவிரதத்தின் மீது மேலும் மேலும் முக்கியத்துவம் போடப்பட்டது … ஆரம்ப நூற்றாண்டுகளில் (ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து குறிப்பாக) தவக் காலத்தை கடைப்பிடிப்பது மிகவும் கண்டிப்பானது. ஒரு நாளைக்கு ஒரு உணவு மட்டுமே, அதுவும் மாலையில் உண்ண அனுமதிக்கப்பட்டது; இறைச்சி, மீன்கள், பெரும்பாலான இடங்களில் முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கூட அனுமதிக்கப்படவில்லை (கத்தோலிக்க கலைக்களஞ்சியம்).

ஒன்பதாம் நூற்றாண்டு முதல், தவக் காலத்தின் (Lent) கடுமையான விதிகள் தளர்த்தப்பட்டன. அப்பொழுது, உண்ணாவிரதம் மற்றும் விலகுதல்களிலிருந்து, பாவ அறிக்கை மற்றும் பாவ மண்ணிப்புக்கு போன்ற நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அப்போஸ்தலிக் அரசியலமைப்பு போப் பவுல் IV யின் போயனிடெமினிப்படி (Poenitemini) (பிப்ரவரி 17, 1966) “சாம்பல் புதன் மற்றும் ஆண்டின் முழுவதும் அனுசரிக்கப்படும் விழா அல்லத வெள்ளிக்கிழமைகளில் விலக்குதல் கடைப்பிடிக்க வேண்டும், சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி அன்றோ உண்ணாவிரதத்துடன் விலக்குதலையும் கடைபிடிக்கப்பட வேண்டும்” (கத்தோலிக்க கலைக்களஞ்சியம்).

இன்று, தவக் காலம் (Lent) “பாவத்திலிருந்தும், பாவம் போன்ற காரியங்களிருந்தும் விலகுதல்… பாவத்தை கைவிட்டு அதன் வழிகளிலிருந்து மாறுதல்”. இது ஒரு மனம் திரும்புதலின் காலம், அதாவது பாவத்திற்கான துக்கம் அடைந்து, கர்த்தருக்குகாக மாறுவது.” இந்த பாரம்பரித்தின் படி, தவக் காலத்தின் போது உண்ணாவிரதம் மற்றும் சுய ஒழுக்கத்தை கடைடிப்பதின் மூலம் விசுவாசிகளுக்கு “தங்களது இதயத்தை சுத்திகரிக்கயும், தங்களது வாழ்க்கையை புதுப்பிக்கவும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சத்தியை பெறுவார்கள் என்று ஒரு நம்பிக்கை.“

ஆனால், வேதம் தெளிவாகக் காட்டுகிறது அந்த சுய கட்டுப்பாடு - நிதானம் - கர்த்தரின் பரிசுத்த ஆவி இரச்சிக்கப்பட்ட மனதின் வாழ்க்கையில் செயல்படுவதின் மூலம் தான் வரும் என்று (கலா. 5:16, 17, 22). உண்ணாவிரத்திலிருந்து மாத்திரம் தெய்வீக சுய கட்டுப்பாட்டை உருவாக்க முடியாது.

பவுல் சுய மறுப்பை பயன்படுத்துவது சுய ஒழுக்கத்தை மாத்திரம் நம்புவதற்கான ஒரு கருவி என்று எச்சரித்துள்ளார். அவர் அதை “சுய ஒழுக்க வழிபாடு” என்றும் அழைத்தார். “நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.” (கொலோ. 2: 20-23).

நீங்கள் “உங்களை அடித்துக்கொண்டோ” அல்லது “சுய ஒழுக்கத்தை வளர்த்துக்கொண்டோ” பாவத்தை விட்டு மனம் திருபுவதற்கான ஒரு கருவியாக தவத்தை கர்த்தர் வடிவமைக்கவில்லை: “மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்?” (ஏசா. 58: 5-7).

இப்படி இருக்க வேதம் தவத்தை பற்றி என்ன சொல்லுகிறது?

கர்த்தரின் மக்கள் தங்களைத் தாழ்த்தி, கர்த்தரிடம் நெருங்கி வருவதர்க்கே தவம் வடிவமைக்கப்பட்டது - அப்படி தவம் இருப்பதன் மூலம் அவர்கள் கர்த்தரை போலவே சிந்திக்கக் கற்றுக்கொண்டு, அவர்கள் வாழும்படிக்கு எல்லாவற்றிலும் அவரின் வாழ்க்கை முறையை போல நடந்து கொள்ளுவார்கள். எரேமியா தீர்க்கதரிசி எழுதியதை கவனியுங்கள்: “ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”(9: 23-24). உண்ணாவிரதம் மற்றும் பிராத்தனைகள் மட்டும் கிறிஸ்தவர்களுக்கு கர்த்தரிடம் நெருங்கி வர உதவுகிறது.

தவக் காலத்தின் (Lent) ஆதி வேறுகள்

ஆங்கிலோ-சாக்சன் லென்டனில் (Lencten) இருந்து வந்தது தான் லெண்ட் (Lent - தவக் காலம்), இதன் பொருள் “வசந்தம்”. லென்ட் உருவானது பண்டைய பாபிலோனிய மர்ம மதத்திலிருந்து. “நாற்பது நாட்கள் தவக் காலத்தின் விரதம் பாபிலோனிய பெண் தெய்வத்தின் வழிபாட்டாளர்களிடமிருந்து நேரடியாக கடன் வாங்கப்பட்டது … ஆண்டுதோறும் கொண்டப்படும் பெரும் நினைவு விழாவான தம்மஸின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு விக்கிரங்களின் மத்தியில் இந்த லென்ட் (Lent) ஒரு இன்றியமையாத பூர்வாங்க நிகழ்ச்சியாக இருந்ததாக தெரிகிறது” (இரண்டு பாபிலோன்கள்).

தம்முஸ் பாபிலோனியர்களின் அந்திக்கிறிஸ்து - சாத்தானின் பல கள்ள கிறிஸ்துகளில் இவனும் ஒன்று!

தம்முஸின் விருந்து பொதுவாக ஜூன் மாதம் கொண்டாடப்பட்டு இருந்தது (அதை “தம்முஸ் மாதம்” என்றும் அழைக்கப்படும்). விருந்துக்கு 40 நாள்களுக்கு முன்பு லென்ட் (Lent) நடைபெற்றது, “அழுகையும் மகிழ்ச்சியும் மாறி மாறி கொண்டாடப்படும்” அதனால் தான் லென்ட்க்கு “வசந்தம்” என்று பெயர்; அது வசந்த காலம் முதல் கோடை ஆரம்பம் வரை நடைபெறும்.

வேதம், பண்டைய யூத மக்கள் இந்த அந்திக்கிறிஸ்துவை வணங்கியதாக பதிவு செய்கிறது: “என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டுபோனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக (தம்முஸ்க்காக) அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,” (எசே. 8: 14-15). இது கர்த்தரின் கண்களுக்கு மிக அருவருப்பான ஒன்று!

ஆனால் ரோம தேவாலயம் ஏன் அத்தகைய விக்கிரக விடுமுறையை நிறுவச் செய்தது?

”விக்கிரக வழிபாட்டுக்கரர்களுடன் கிறித்துவத்தை சமரசம் செய்ய ரோமப் பேரரசு, அதன் வழக்கமான கொள்கை தொடர்ந்தது. பெறும் நடவடிக்கை எடுத்து கிறிஸ்தவ திருவிழாக்களையும் விக்கிரக திருவிழாக்களையும் ஒன்றிணைத்தது. பல சிக்கல்கள் இருப்பினும் திறமையான வழிகள் மூலம் நாட்காட்டியை மாற்றினார்கள், அது பொதுவாக, எந்தவொரு விதத்திலும் சுலபமான விஷயம் இல்லை, புறமதத்தையும் கிறிஸ்தவத்தையும் சேர்ப்பது - கிறிஸ்தவம் இப்போது முற்றிலும் உருவ வழிபாட்டில் மூழ்கிவிட்டது. இதிலும், மேலும் மற்ற பல விஷயங்களிலும் கைக்குலுக்கியது (இரண்டு பாபிலோன்கள்).

ரோம பேரரசு பஸ்காவுக்கு பதிலாக ஈஸ்டரை வைத்தும், விக்கிரக வழிபாடான தம்மூஸின் விருந்து ஜூன் மாதத்திலிருந்த வசந்த காலத்தின் துவக்கத்திற்கு நகற்றியது, இது தான் “கிறிஸ்தவமயமாக்குதல்”. லென்டும அதனுடன் நகர்ந்தது.

“இவ்வாறு ஈஸ்டர் நாளின் மாற்றம் தொடர்பாக பெரும் விளைவுகளை சந்தித்தது. அன்று அது திருச்சபைககுள் மிகப்பெரிய ஊழலுடனும் லென்ட் தவிர்ப்பதை குறித்த பெரும் மூடநம்பிக்கைகளும் கொண்டு வந்தது.” (இரண்டு பாபிலோன்கள்).

லென்த்துக்கும் தனிப்பட்ட பாவங்களை விட்டுக்கொடுப்பதற்கும் முன், அதாவது சாம்பல் புதனுக்கு முந்திய செவ்வாய் அன்று, அவர்கள் “எதையும் செய்கிற” கொண்டாட்டம் ஒன்று கொண்டாடுவார்கள . இதில், தங்கள் பங்குக்காக பெரும் துஷ்பிரயோகம் மற்றும் மகா பாவங்களை செய்வார்கள். - இன்றைக்கும் இதை உலகம் மார்டி கிராஸ் (Mardi Gras) அல்லது கொழுத்த செவ்வாய் என்று கொண்டாடுகிறது.

அருவருப்பு கிறிஸ்தவமாக மறைக்கப்பட்டது

தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார் (I கோர். 14:33a). அவர் ஒருபோதும் லென்டை நிறுவவில்லை, அது துஷ்பிரயோகம் நிரைந்த பொய்யான மேசியாவையுடனும் அவன் பொய்யான உயிர்த்தெழுதலையுடனும் இனைந்த ஒன்று.

கர்த்தர் தம் மக்களுக்கு தன்னை பின்பற்றும்படிக்கு கட்டளையிடுகிறார் - மனிதர்களின் மரபுகளை அல்ல. கர்த்தரின் வழிகள் மனிதனை விட உயர்ந்தவை (ஏசா. 55: 8-9). மனிதர்கள் தங்களால் தங்களுக்குக்கென்று எது நல்லது, எது தவறு என்றோ, கர்த்தரை ஒழுங்காக வணங்குவது எப்படி என்றோ தீர்மானிக்க முடியாது. ஏனெனில் “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரே. 17: 9), மற்றும் “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்” (10:23). நம்மை வடிவமைத்தவரும் நமக்கு உயிர் கொடுத்தவருமான கர்த்தருக்கு தெரியும் நாம் அவரை எப்படி வணங்க வேண்டும் என்று. அவர் கற்பனையின்படியேயே நாம் நடப்போம்.

ஒரு கிறிஸ்தவராக இருந்து கர்த்தருக்கு ஒழுங்காக சேவை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் “கர்த்தர் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்” படியேயும் நடக்க வேண்டும் (மத் 4: 4), அவருடைய பரிசுத்த வேதவசனங்களை “உடைக்க முடியாது” என்றும் புரிந்து கொள்ள வேண்டும் (யோவான் 10:35).

விக்கிரக மரபுகளிலிருந்தும், உலகின் பழக்கவழக்கங்களிலிருந்தும் ஓடுங்கள் என்று கர்த்தர் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறார். இவைகள் சாத்தானால் வழிநடத்தப்பட்டும் ஏமாற்றப்பட்டும் இருக்கும் வழிகள் (II கொரி. 4: 4; வெளி. 12: 9).

தவக் கால மத அனுசரிப்பு ஒரு நேர்மையும் இதயப்பூர்வமுமானது போல் தோன்றலாம். ஆனால் அது கர்த்தரின் திட்டத்திலிருந்து திசை திருப்பும் கள்ளத்தனமான விக்கிரக வழிபாடுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

எல்லா புறமத அனுசரிப்புகளையும் கர்த்தர் வெறுக்கிறார் (எரே. 10: 2-3; லேவி. 18: 3, 30; உபா 7: 1-5, 16). அவைகளை “கிறிஸ்தவமயமாக்கவும்” முடியாது, மக்களால் சுத்தப்படுத்தவும் முடியது. அதில் லென்டும் அடங்கும்.

இது தான் லென்ட் எனப்படும் தவக் காலத்தின் உண்மையான அர்த்தம், இப்போது உங்களுக்குத் தெரித்தது.